இன்று இருவர் சேர்ந்தால் ஓர் அமைப்பு, ஓர் கட்சி. அலெக்ஸ் ரவி
புலிகளிடமிருந்து வன்னியை மீட்டேடுக்கும்போது அப்பாவி மக்களும் இறந்ததை ஜனநாயகத்திர்க்கான போர் என்று இலங்கை அரசாங்கமும் (மகிந்த அரசு தலைமையில் சரத் இராணுவ வழிநடத்தலில்), இராக்கில் சதாமிற்கு எதிரான போர் ஜனநாயகத்திர்க்கான போர் என்று அமெரிக்க அரசாங்கமும், பின் அதின் தொடர்ச்சியாக ஆப்கானில் தொடரும் போர் தலிபானிற்கு எதிரான ஜனநாயகத்திர்க்கான போர் என்றும் கூறும் நிலையில் இங்கு சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும், குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் இலங்கையர்கள் ஜெனீவா நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர், என்று செய்தி சொல்கிறது.
குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்படாத அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கக் கோரியும் என்பது சகல ஜனநாயகவாதிகளாலும், மனிதஉரிமைவாதிகளாலும் வரவேற்படக்கூடிய விடயம். ஆனால் இங்கு சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரியும் இவர்கள் கேட்பது எந்த விதத்தில் ஜனநாயக ரீதியில், மனிதாபிமான ரீதியில் நியாயமாகின்றது என்று தெரியவில்லை?
அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கலந்துகொண்டதாவும் அறியப்படும் இடத்தில், இவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சரத் பொன்சேக்காவின் அனுதாபிகளா? அல்லது கூத்தமைப்பின் அனுதாபிகளா என்பதை தெளிவாக இச்செய்தியில் அறியமுடியவில்லை.
மேலும் இதில் உரையாற்றியவர்கள் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ குடும்ப நிர்வாகத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வென்றெடுக்கும் தேவை குறித்து சுட்டிக்காட்டினறேன்றும் குறிப்பிடும் வகையில் ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது, இது ஜனநாயகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை; மகிந்த ராஜபக்ஷ குடும்ப நிர்வாகத்திற்கு எதிரான ஓர் அரசியல் பின்னணி உள்ள ஆர்ப்பாட்டம். உதாரணதிற்கு சொன்னால் கடந்த வருட வன்னிப்போரில் பிரபாகரனின் படத்தையும் புலிக்கொடியையும் பிடித்துக் கொண்டு மக்களை கேடயமாக வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை மக்களை விடுவிக்கும் படி கோராமல் அரசாங்கத்திற்கு மட்டும் அழுத்தம் கொடுத்தது போலதேயாகும்.
“ஜன” + “நியாயம்” (ஜனநாயகம்) என்பது கொடி பிடிப்பதினாலையோ, ஆர்ப்பாட்டத்தாலையோ, அறிக்கைகலாலையோ வருவதில்லை. ஜனங்களிர்க்கான நியாயத்தினூடாகவே ஜனநாயகம் பிறக்கும்; அதற்கும் நியாயத்தின் ரீதியில் ஜன எழுச்சி எழ வேண்டும்!
எல்லாவற்றிற்கும் மனித நேயமும் மனிதாபிமானமும் வேண்டும்!
0 comments :
Post a Comment