Tuesday, March 30, 2010

ஐ.நா வின் விசேட நிபுணர்கள் குழு போர்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தாதாம்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வது தொடர்பில் தனக்கான ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஐ.நா வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். இவ் நிபுணர் குழு தொடர்பாக இலங்கை அரசு, அணிசேரா நாடுகள் மற்றும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் தமது எதிர்பதை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இலங்கை மீதான போர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குறிப்பிட்ட விசேட நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது என ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளதுடன் இச்செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும், அணி சேரா நாடுகள் அமைப்பிற்கும் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறான ஓர் நிபுணர்கள் குழுவை, இலங்கை அரசு கவனத்தில் கொள்ளாது என இலங்கை வெளிவிவகார அமைச்சக உயரதிகாரியொருவர் தெரிவித்திருந்தமையும், இந்நிபுணர்குழுவில் பங்கேற்குமாறு ஜப்பானுக்கு விடுத்திருந்த அழைப்பை அந்நாடு நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

போர் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்க முனைப்பு காட்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள், பான் கீ மூனின் அறிவிப்பினால் கவலையடைந்துள்ளதாக லக்பிம நாளேடு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment