Tuesday, March 23, 2010

தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சரின் அதரவாளர் துப்பாக்கிச் சூட்டில் பலி.

அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தனவிற்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு மரமொன்றின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அமைச்சரின் ஆதராவாளர்கள் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றிரவு மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்றச் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய லோறன்ஸ் பாஸ்ரின் என்பர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நீண்டநாள் குரோதம் ஒன்றின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், உயிரிழந்தவர் பிரதேசத்தில் நெடுநாட்களாக வட்டிக்கு கொடுத்துவருபவர் எனவும் அப்பிரதேசங்களில் சூதாட்டங்களை நடத்துபவர் எனவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பேச்சாளரின் தகவலிலிருந்து அமைச்சர்களின் அடியாட்களாக தேர்தல் பிரச்சாரங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபடுவோர் பலதரப்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என்பது தெளிவாகியுள்ளது.

No comments:

Post a Comment