Monday, March 29, 2010

முஸ்லிம் எழுத்தாளரின் கைது சட்டத்திற்கு முரணானது.

தேச விரோத செயலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்டப்டுள்ள சாரா மாலினி பெரேரா எனும் பெண்ணின் கைது சட்டவிரோதமானது என அவரின் சட்டத்தரணி அலெக்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் தனது கட்சிக்காரரின் கைது தொடர்பாக தனக்கோ அன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கோ இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை என அவர் லண்டன் பிபிசி யின் சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் புத்த மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியுள்ள மேற்படி பெண்ணின் பர்தாவை கழற்றி பொலிஸார் வீடியோ செய்துள்ளதாகவும் அவரது விருப்புக்கு மாறாக அவரை புகைப்படங்கள் எடுத்துள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத பெண்ணின் உறவினர்கள் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணான இவர் வளைகுடா நாடான பஹ்ரெயினில் வசித்துவந்துடன் தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார்.

சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான 'இருளிலிருந்து ஒளியை நோக்கி' என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ப் டெய்லி நாளேடு செய்திவெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment