ரஷ்யாவில் மீண்டும் குண்டுவெடிப்பு தாக்குதல்; 9 பேர் பலி .
ரஷ்யாவில் இன்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் உள்பட 9 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.
ரஷ்யாவின் வடக்கு கக்காஸஸ் பகுதியின் டாகெஸ்தான் என்னும் முஸ்லீம் குடியரசில் உள்ள கிஷ்லயர் நகரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அங்குள்ள பள்ளி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மர்ம கும்பல் வெடிக்கச் செய்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த திங்கட்கிழமையன்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment