Monday, March 8, 2010

நைஜீரியா: மதக்கலரவத்திற்கு 500 பேர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மதக்கலவரத்தில் 500 க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஜோஸ் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்வது உண்டு.

இந்நிலையில் நேற்றிரவு இங்குள்ள இரண்டு கிறிஸ்தவ கிராமங்களுக்குள் புகுந்த எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள், வீடுகளில் நுழைந்து அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

கலவரக்காரர்களால் வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.இதில் சுமார் 500 க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக உள்ளூர் மனித உரிமை குழுக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கலவரம் வெடித்த பகுதிகளில் காவல் துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமைதியை நிலைநாட்டிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நைஜீரிய அதிபர் பொறுப்பில் உள்ள ஜோனாதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment