பிரான்ஸ் கடற்படையினர் 35 கடற்கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர்.
சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேரை பிரான்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதன் வளைகுடா கடல் பகுதி வழியாக வரும் சரக்கு கப்பல்களை கடத்திச் சென்று, பணம் பறிப்பதை சோமாலியா கடல் கொள்ளையர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவர்களை ஒடுக்க ஐரோப்பிய யூனியன்,"அட்லாண்டா மிஷன்" என்ற அமைப்பை கடந்த 2008 ஆம் ஆண்டு உருவாக்கியது.இதில் பல்வேறு நாட்டுப் படையைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் கப்பற்படையினர் சோமாலியா கொள்ளையர்களை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள்.அப்போது கப்பலை கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களால் கடத்தப்பட்ட 4 பெரிய கப்பல்கள், 6 சிறிய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கொள்ளையர்களுக்கு சொந்தமான 4 பெரிய கப்பல்கள் மற்றும் ஏராளமான படகுகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment