30 வருட யுத்தத்தில் புலிகள் எதை சாதித்தார்கள் என்ற கேள்வியை கேட்க முடியும். சித்தார்த்தன்.
லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வாராந்த அரசியல் ஆய்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07/03/2010) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு. சித்தார்த்தன் கலந்திருந்தார். இலங்கையின் நடைமுறை அரசியல் தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அவரிடம் தொலைபேசி ஊடாக இணைந்து கொண்ட நபர் ஒருவர் கடந்த 87 ம் ஆண்டிலிருந்து அரசுடன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றீர்கள் எனவும் இத்தனை காலப்பகுதியில் எதைச் சாதித்துள்ளீர்கள் எனவும் கேட்டபோது, தம்மிடம் இக்கேள்வியைக் கேட்டால் இலங்கைத் தமிழ் மக்களின் சகல வழங்களையும் ஒன்று திரட்டி புலிகள் 30 வருடங்களாக நாடத்திய ஆயுதப்போராட்டத்தின் ஊடாக எதைச் சாதித்துள்ளார்கள் என்ற கேள்வியையும் எம்மால் எழுப்ப முடியும் எனக்கூறிய அவர், தமது அமைப்பு வவுனியாவில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளதாகவும் இலங்கையில் வடகிழக்கில் 90 ம் ஆண்டிலிருந்து இரவு நேரங்களில் நிரந்தரமான ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பிரதேசமாக வவுனியா இருந்து வந்துள்ளது எனக்கூறியதுடன், தாம் இராணுத்தினருடன் பேணிய உறவுமுறையின் பிரதிபலனாகவே வவுனியா மக்களால் ஊரடங்கு உத்தரவு அற்ற பிரதேசம் ஒன்றில் வாழமுடிந்தது எனவும் தாம் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையேயான தடைச்சுவராக இருந்துள்ளதாகவும் தமது இராணுவத்தினருடனான சுமகமான உறவுகளுடாக அவர்கள் மக்களை நேரடியாக அணுகாதவாறு பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் சிறுபான்மை தமிழ்கட்சிகள் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைகளை எடுத்து கூறுவதற்காக தனித்துவத்துடன் செயல்படவேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் கடமை என தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறுதுறை செயலாளர் நிருபாமா ராவ்யை சந்தித்தித்து அம்மக்களின் நாளாந்த தேவைகள் தொடர்பாக எடுத்து கூறியதாகவும் அதனை மிகவும் அக்கறையுடன் செவிமடுத்தாகவும் தெரிவித்த அவர் வன்னிமக்கள் தமது உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்வதால் அவர்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொள்ளுவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நடைபெற உள்ள நாடளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்ற அதேவேளை பல புதிய புதிய அரசில் கட்சிகளையும் பல சுயோட்சை குழுக்களையும் அரசாங்கம் உருவாக்கி இத் தேர்தலில் போட்டியிட வைத்துள்ள போதிலும் மக்கள் மிக தெளிவாக அவர்களை இனம் கண்டுகொண்டு உள்ளதாகவும் தருமலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறினார்.
தோடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதை சூழ்நிலையில் தமிழ்கட்சிகள் ஒன்றினைந்து செயற்பட வாய்ப்புகள் இல்லை என தெரிவித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒஸ்லே பிரகடனத்தின் அடிப்படையிலும் தமிழர் விடுதலை கூட்டணி இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான அதிகாரமுறை போன்றும் , தமிழ்காங்கிரஸ் இருதேசம் ஒரு நாடு என்ற முறையிலும் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மாநாபா) மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம் சமஸ்டி முறையிலும் (சுவிஸ் நாட்டு அரசில் முறைபோல்) , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பதிமூன்றாவது அரசியல் அமைப்பு சட்டதிருத்தபடியும் தீர்வுதிட்டங்களை முன்வைத்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிகாட்டியதுடன் தேர்தல் முடிந்தவுடன் தெரிவுசெய்படுகின்ற நாடளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட எண்ணம் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் பிரித்தானியாவில் உலக தமிழர் பேரவையினரால் கூட்டபட்ட கூட்டத்தில் பிரித்தானியாவின் வெளியுறுதுறை அமைச்சர் கலந்து கொண்டதும் அதன் பின்பு பிரித்தானியா பிரதமர் சந்திப்புகளை நடாத்தியுதும் பிரித்தானியாவில் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்தலில் தமிழர்களின் வாக்குளை பெறுவதற்காகவே என குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளிநாடுகளில் நடைபெறும் நாடுகடந்த தமிழ் ஈழம் வட்டுகோட்டை தீர்மானம் போன்றவைகளை பற்றி இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அக்கறை கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment