3 வயது குழந்தையை கங்கையில் விசிய தாய் கைது.
தனது மூன்று வயதேயுடைய மகனை களுகங்கையில் தாயொருவர் வீசிய சம்பவம் ஒன்று கொழும்பு தலைநகரின் புறநகர் பகுதியான கழுத்துறையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாயை கைது செய்த பொலிஸார் அவரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தினர். இவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போலிஸாரினால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய 5 குழந்தைகளின் தாய் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், நான் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டடுத்திட்டத்தில் வசிக்கின்றேன். எனக்கு 5 குழந்தைதகள் உண்டு. இவ் ஐந்து குழந்தைகளையும் பராமரிப்பது மிகவும் கஷ்டம். எனது கணவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். எமக்கு எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமையில் வாடுகின்றோம். இந்நிலையில் எனது குழந்தைகளில் கடைசி குழந்தையை சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றிடம் கையளிக்க முயற்சிகள் செய்தேன். அதற்கு எனது கணவர் இணங்கவில்லை. குழந்தையின் பிறப்பத்தாட்சி பத்திரத்தை தன்னுடன் வைத்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதென்ற முடிவுக்கு வந்தேன். குழந்தையையும் தூக்கிகொண்டு களுகங்கை அருகே சென்றேன். குழந்தையுடன் கங்கையில் குதிப்பதென முடிவு செய்திருந்தேன். அப்போது குழந்தை எனது தோளில் நித்திரையாகி விட்டது. குழந்தையை கங்கையில் வீசி விட்டேன் என தெரிவித்துள்ளார்.
களுகங்கையில் வீசப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் தத்தளிப்பதை கண்ட வாகன சாரதி ஒருவர் நீரினுள் குதித்து குழந்தையை மீட்டுள்ளார். தற்போது குறித்த குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பிலுள்ள லேடி றிச்வே வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றது.
0 comments :
Post a Comment