Thursday, March 25, 2010

23 இலங்கையர்களுடன் பிரிட்டன் கப்பல் சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தல்.

23 சிப்பந்திகளுடன் பிரிட்டனைச் சேர்ந்த வர்த்தக கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் பெர்முடாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக கப்பல் ஒன்று எகிப்திலிருந்து, ஈரானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது.

இதில் 23 இலங்கை பணியாளர்களும், பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்த இருவரும் பணியாற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 ஆயிரம் டன் கொள்ளளவை கொண்ட 'டெல்கா' என்னும் இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால், ஓமன் கடற் பகுதியில் இருந்து 120 கடல் மைல்களுக்கு அப்பால் கடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, 13 இலங்கையர்கள் மற்றும் கிரேக்க நாட்டவர்கள் அடங்கிய மற்றொரு கப்பல் இந்த மாத ஆரம்பத்தில், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சொந்தமான இந்த கப்பலையும், பணியாளர்களையும் மீட்பதற்காக, 2 கோடி அமெரிக்க டாலர் தொகையை கொள்ளையர்கள் பிணைத் தொகையாக கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com