Saturday, March 13, 2010

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -8)

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன். குழியில் இருப்பவர்களை காலையில் ஏணிகள் வைத்து வெளியில் வரச் சொல்வார்கள். அவர்கள் வெளியே வரும்போது கையில் சொப்பின் பை ஒன்றினைக் கொண்டுவருவார்கள். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும்.

அவர்களைப் பார்த்தால் புழுதி படிந்த மேனியுடன் காய்ந்து சாம்பல் படிந்த தலையுடன் நடக்க முடியாமல் மெதுவாக கையில் பையுடன் அசைந்து அசைந்து செல்வார்கள். கையில் கொண்டு வரும் பைகளில் மலமும் சிறுநீரும் இருக்கும். ஒவ்வொருவரும் அதனைக் கொண்டு சென்று மலக்குழியில் வீசவேண்டும், பின்னர் அவர்களும் காலைக் கடனைக் கழிக்கவேண்டும்.

மீண்டும் குழியை நோக்கி நடந்து சென்று ஏணிவழியாக உள்ளே இறங்க வேண்டும். இப்படி குழிகளுக்குள் இருப்பவர்கள் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஐ சேர்ந்தவர்களும்தான் அதிகமாக இருந்தனர்.

முள்ளிக்குளம் முசல்குத்தி என்ற இடத்தில் புளொட் இயக்கத்தினர் முகாம் அமைத்து இருந்ததாகவும், அதனை இலங்கை இராணுவத்தின் துணையுடன் புலி விலங்குகள் தாக்கியதாகவும், அதில் இரு பகுதியினருக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டதாகவும், இறுதியில் விலங்குகள் வெற்றிகொண்டதாகவும் அறிந்தேன்.

அப்படி முசல்குத்தி முகாமில் உயிருடன் கைது செய்யப்பட்டவர்களையும், அந்த இயக்கத்துக்கு உதவி செய்த பொதுமக்களையும் பிடித்து வந்து இந்தப் பெருங்குழிகளில் விலங்குகள் இட்டு அடைத்து வைத்திருந்தனர் இந்த விலங்குகள்.

சில முக்கிய உறுப்பினர்களைத் தனிக் குழிகளிலும் ஏனையோரை பொதுவான குழிகளிலும் வைத்திருந்தனர். இரண்டுவேளை உணவு வாளிகளில் கயிற்றைக் கட்டி இறக்குவார்கள். உண்பது, கை கழுவுவது எல்லாம் அந்தக் குழிக்குள்தான். காலை ஒரு வேளைதான் இவர்கள் வெளியே வர முடியும். அதன் பின்னர் ஏணியை எடுத்துச் சென்று விடுவார்கள். 24மணி நேரமும் அவர்கள் அந்தக் குழிக்குள்தான் இருக்க வேண்டும். குழியினுள் எதுவும் கிடையாது. இவர்கள் அனைவருக்கும் நில நிற கால்சட்டை மட்டும்தான் கொடுத்திருந்தனர். இவர்களது விலங்குகளை விலக்கிவிட்டால் கூட இவர்களால் முறையாக நடந்து செல்ல முடியாத அளவு நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

காலையில் கடன் கழிக்க வரும்போது அவர்களை அருகில் பார்ப்பேன். மனிதன் என்ற அடையாளங்களை இழந்திருந்தனர். அவர்கள் தாக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, நாட்பட்ட பிணங்கள் போல நடந்து வருவார்கள். மனிதர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்படுகின்றனர் புலி என்ற விலங்குகளால், இந்தப் புலி விலங்குகளை பிற நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்த்திப் பாடுகின்றனர். வெளியுலகுக்கு வேங்கைகள், உள்ளுர் மக்களுக்கு கொடிய விலங்குகள்.

இவர்கள் காலைக் கடன் கழித்து மீண்டும் குழிகளுக்குள் இறக்கிய பின்னர் புலி விலங்குகள் தங்களது இயக்கப் பாடல் என்று கூறி சில பாடல்களை பொக்ஸ் வைத்து ஒலிபரப்புச் செய்வார்கள். அவற்றில் ஒரு பாடல் என் நினைவை இன்றுவரை அகலவில்லை. அப்பாடல் பின்வருமாறு:

நடந்து வந்த பாதை தனைத்
திரும்பிப் பாரடா
நீ நாச வேலை செய்த பின்னர்
வருந்துவாயடா
அடர்ந்த காற்றில் எரியும்
தியாக நெருப்புத்தானடா
உன்னை ஆட்டுகின்ற
சக்தியோடு எரிக்கும்தானடா

எதிரி காலில் ஏறிநின்று செருப்புமாகினாய்
தமிழீழ மண்னை எண்ணை ஊற்றி
நெருப்பை மூட்டினாய்
கதிரை ஏறும் ஆசை கொண்டு
விலையுமாகினாய்
புலிவீரர் களத்தில் போகும் போது
தலையுமாட்டினாய்….(2) – நடந்துவந்த


தம்பிமாரை கொன்றவர்க்கு
வாழ்த்துப் பாடினாய்
உன் தங்கை கற்பை தின்றவர்க்கு
மாலை சூடினாய்
நம்பி இருந்த எங்களுக்கு
நஞ்சை ஊட்டினாய்,
புலி நாளை வரும் அந்த நேரம்
கம்பி நீட்டுவாய் -(2) - நடந்து வந்த

இந்தப் பாடலைப் பாடியவர் தேனிசை செல்லப்பா எனக் கூறினர். தமிழகத்தில் பலர் புலிகள் சுரண்டிய பணத்தில் இவர்களும் பக்கவாட்டில் சம்பாதித்தார்கள். சிலர் வாய்கிழியப் பேசிச் சம்பாதித்தனர் ஈழத் தமிழர் பணத்தை.

செல்லப்பா என்ற நபர் தெருக்கூத்துப் பாடல்களைப் பாடித்திரிந்த நபர், சினிமாக்களிலோ அல்லது கச்சேரிகளிலோ தலைகாட்டத் தயுதியில்லாதவர், இன்று பல கோடிகளைக் குவித்து பெருவாழ்வு வாழ்கிறார். அனைத்தும் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வழங்கியது. புலி ஏற்பாட்டில் உலகம் சுற்றி சம்பாதித்துள்ள இந்த நபர் தமிழகத்தில் இருக்கும் எங்கள் அகதி இனத்துக்கு அப்படிச் சம்பாதித்தப் பணத்தில் ஒரு ரூபாயைக் கூடக் கொடுக்காத கொடை வள்ளலாவார்.

இந்த நபரது சொந்த ஊர் சொக்கம்பட்டி, இவரது ஊருக்கு அருகில் கடையநல்லூர் என்ற இடத்தில் அகதிகள் முகாம் உண்டு. இவர் ஈழத் தமிழர் பணத்தில் பிளைப்பு நடத்தப் புறப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் தனது பணத்தில் ஒரு ரூபாயைக் கூட இந்த அகதிகளுக்கு வழங்கியது கிடையாது.

தமிழ் இனத்துக்குள் மோதிக் கொண்டு அழிகின்றனர். பாட்டுப்பாடி அவ்வின அழிப்பை ஊக்குவித்த இந்த மிருகமும் ஓர் கழுதைப் புலிதான்.

“நடந்து வந்த பாதையினைத் திருப்பிப் பாரடா”!

1986ல் ரெலோ இயக்கத்தவர்களை நெருப்பில் போட்டு எரித்துக்கொன்றதையும், துப்பாக்கியால் சுட்டும், கிறனைட்டை அவர்கள் மீது வீசியும் பல நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப் போராளிகளை படுகொலை செய்து விடுதலைப் போருக்கு களங்கத்தை மட்டுமல்ல தீராத பகையினை ஏற்படுத்திய வரலாற்றை அதாவது நடந்து வந்தவரலாற்றை நீ திரும்பிப் பாரடா என்று நாம்தான் புலி விலங்குகளைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள், பின்னர் புளொட் தோழர்கள் அதற்கு முன்னர் ஓபராய் தேவன், பின்னர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனது இயக்க அங்கத்தினர் என்று அனைத்து இயக்க இளைஞர்களையும், அவர்களது உறவினர்களையும், உதவி செய்தவர்களையும் வதை செய்து கொன்றவர்கள் மற்றவர்களுக்கு பட்டம் சூட்டி பாடல் பாடுகின்றனர். ஒவ்வொரு முறையும் இப்பாடலைக் கேட்கும் போது செல்லப்பாவின் முகத்தில் காறித் துப்பிக் கொண்டிருந்தேன் மனதுக்குள்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று கூறுவார்கள். செல்லப்பா கொண்டாடியது மட்டுமல்ல கோடிகளையும் சேர்த்து ஓய்ந்திருக்கிறார். இந்த நாயின் ஊளைக்கு புலி விலங்குகள் அன்று கூத்தாடினர் எங்கள் கண்முன்னே!

“நீ நாச வேலை செய்த பின்னர் வருந்துவாயடா”

நாசவேலைகள் அனைத்தையும் செய்து முடித்தது புலி விலங்குகள் என்பது உலகம் அறிந்ததுதான். ஆனால் “பின்னாளில் வருந்துவாயடா” என்ற தீர்க்க தரிசனம் மிகவும் கச்சிதமாக பொருந்தியது இந்த புலி விலங்குகளுக்குத்தான். வருந்தியது இவர்கள் மட்டுமல்ல, மக்களையும் இழுத்து வந்து வருந்த வைத்தார்கள் முள்ளிவாய்க்காலில்.

நாம் மூவாயிரம் பேர் இவர்களால் துணுக்காயில் வதைக்கப்பட்டோம். நாம் அனைவரும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் நாசவேலை செய்த இவர்கள் மொத்தமாகவே வருந்தினார்கள் முல்லைத்தீவில். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று வானொலி வைத்துக் கதறினார்கள் இவர்களும் இவர்களது புகழ் பாடிகளும். உலகமே மௌனித்து நின்றது இவர்கள் வருந்தும் போது. செல்லப்பாவின் பாட்டு இவர்களது இரக்கமற்ற கொடுஞ்செயலால் முற்றுப்பெற்றது.

தெய்வம் நின்று கொல்லும் என்பது என் கண்முன்னே நடந்தது. ஆயினும் எங்கள் மக்களும் இந்த விலங்குகளிடம் சிக்குண்டு வதைபட்டதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

தொடரும்….

1 comments :

Anonymous ,  March 13, 2010 at 8:51 PM  

glow jane [URL=http://wuqoqumo.tripod.com/tee-shirt-printing-and-equipment.html]tee shirt printing and equipment[/URL] september pages foil nothing brillo [URL=http://ijayoqo.tripod.com/bluetooth-adapter-microsoft-gps.html]bluetooth adapter microsoft gps[/URL] lake della consider drawn pulse [URL=http://wuqoqumo.tripod.com/cheap-tee-shirt-printing.html]cheap tee shirt printing[/URL] extremely labeling braille mixed [URL=http://ijayoqo.tripod.com/gps-receptor-bluetooth.html]gps receptor bluetooth[/URL] transcripts task translated trainers logging [URL=http://mucubuz.tripod.com/antique-costume-jewelry-guide.html]antique costume jewelry guide[/URL] household ginza yourx caldrea programmer dames rarenatural [URL=http://ijayoqo.tripod.com/uk-ebay-bluetooth-gps-receiver.html]uk ebay bluetooth gps receiver[/URL] tries consulting resumption create [URL=http://saqojey.tripod.com/6-payday-loan-default-8.html]6 payday loan default 8[/URL] mostly subordinate destiny [URL=http://ijayoqo.tripod.com/best-gps-with-bluetooth.html]best gps with bluetooth[/URL] actually jrliggett rather correct clearly [URL=http://ijayoqo.tripod.com/belkin-bluetooth-gps-receiver.html]belkin bluetooth gps receiver[/URL] panic patrick score allison oriflame medicines mindful [URL=http://wuqoqumo.tripod.com/t-shirt-printing-china.html]t shirt printing china[/URL] cunningham affairs received potion [URL=http://fizogecu.tripod.com/pellet-guns-shooting-accuracy.html]pellet guns shooting accuracy[/URL] sought color servers [url=http://ijayoqo.tripod.com/map.html]sappohill correction causes [/url]acknowledge evenly timely dealing [url=http://fizogecu.tripod.com/map.html]arent junky skintimate [/url]autumn abercrombie

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com