உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 146வது நினைவு தினம்
முழு இலங்கை மக்களுடைய சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பணியில் ஏற் படும் பாரதூரமான விளைவுகள் காரண மாக தேசத்திற்கு எமது பெறுமதிமிக்க உயிரை அர்ப்பணித்த வீரமிக்க பொலிஸ் வீரர்களுக்கு கெளரவத்தையும் வணக்கத்தையும் தெரிவிப்பதற்கு 21.03.2010ம் நாளை பொலிஸ் வீரர்கள் நினைவு கூரும் நாளாக பொலிஸ் திணைக்களம் பிரகடனப்படுத்தியுள்ளது.
கேகாலை மாவட்டத்திற்குள் குற்றங்கள் பல புரிந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தீகிரி கேவகே சரதியல் உட்பட்ட குற்றவாளிகள் கும்பலை கைது செய்வதற்கு 1863ம் ஆண்டு ஆட்சி செய்த ஆங்கிலேயர்களினால் பொலிஸ் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டது. அதன் பின்னர் சரதியலினால் தான் கைதாவதை தடுப்பதற்கு பல்வேறு உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் தனக்கு வேண்டியவர்களின் வீடுகளில் நாட்களை கழித்துக் கொண்டிருக்கையில் 17.03.1864ம் திகதி அன்று பிரதான பொலிஸ் கொஸ்தாபல் அகமத் என்பவரை தலைவராகக் கொண்ட பொலிஸ் குழு அப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் சரதியல் ஒழிந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்த போது சரதியலின் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜோர்ஜ்வன் ஹோட் என்பவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
அத்துடன் அவர்களுடன் இருந்த முத்துசாமியும், கிறிஸ்தியான் அப்பு என்பவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகியதுடன் மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். அத்தருணத்தில் சரதியலும் அவருடன் இருந்த பிம்மலே மரிக்கார் என்பவரும் தப்பித்து விட்டார்கள்.
அதன் பின்னர் பொலிஸ் சார்ஜன்ட் மஹத் பொலிஸ் கொஸ்தாபல் சபான் அடங்கிய அலுவலர் குழு. சிரிமலா என்னும் பெயருடைய தகவலாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சரதியலை கைது செய்வதற்காக 21.03.1864 திகதியன்று புறப்பட்டார்கள். மேற்கூறப்பட்ட தகவலுக்கேற்ப மாவனல்லை அப்துல் காதரின் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்யும் போது வீட்டின் மேல் மாடியில் இருந்த சரதியல் சார்ஜன்ட் மஹத்தை சுடுவதற்கு முயற்சிக்கும் தறுவாயில் சார்ஜன்ட் மஹத் உடனடியாக சரதியலை சுட்டதன் காரணமாக பல்கனியில் இருந்த சரதியல் நிலத்தில் வீழ்ந்தான். இந்த நேரத்தில் சரதியலின் குழுவின் உறுப்பினர்களில் ஒருவனான மம்மலே மரிக்கார் பல்கனியிலிருந்து வைத்த துவக்கு சூட்டில் பொலிஸ் கொஸ்தாபல் சபான் கொல்லப்பட்டார். கடமையில் ஈடுபட்டிருக்கும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இதன் பின்னர் வீரமரண மெய்திய பொலிஸ் வீரர்களின் பெயர் பட்டியலில் இச்சம்பவம் இதுவாகும். இதன் பின்னர் வீரமரண மெய்திய பொலிஸ் வீரர்களின் பெயர் பட்டியலில் இச்சம்பவம் முதலாவதாக இடம்பெற்றது. 21.03.1964ம் திகதி கடமையின் போது உயிரை தியாகம் செய்த அமரர் சபானின் பெயராகும்.
எவ்வாறாயினும் 1977ம் ஆண்டு தொடக்கம் 32 வருடங்களுக்கு மேலாக காலமாக நடந்த கொடிய பயங்கரவாத த்தை முறியடிக்கும் நடவடிக்கைகளின் போது பயங்கரவாதிகளினால் 14.02.1977 அன்று காங்கேசந்துறையில் பொலிஸ் கொஸ்தாபல் கருணாநிதியை கொன்ற துடன் ஆரம்பித்த பயங்கரவாத நட வடிக்கைகளில் இன்று வரை 2585 பொலிஸ் அலுவலகர்கள் தங்களின் உயிரை நீத்ததுடன், 3224 பேர் நிரந்தரமாக இயலா நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடமை நேரத்தில் இருந்தபோது பயங்கரவாத நடவடிக்கையாலும் சாதாரண கடமைகளில் ஈடுபட்டிருக்கும் போதும் உயிரை தியாகம் செய்த பொலிஸ் வீரர்களும் வீராங்கனைகளுமாக 3097 பேர் பொலிஸ் வீரர்களாக கெளர விக்கப்படுவதுடன் அன்புடன் நன்றியுடனும் நினைவு கூரப்படுகின்றனர்.
அவர்களில் ஒரு பிரதிப் பொலிஸ் மாஅதிபரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 06 பேரும், பொலிஸ் அத்தியட்சகர்கள் 05 பேரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேரும், பொலிஸ் பரிசோதகர்கள் தரத்து அலு வலர்கள் 280 பேரும் பொலிஸ் சார் ஜன்ட் மேஜர், பொலிஸ் சார்ஜன்ட், பொலிஸ் கொஸ்தாபல், பொலிஸ் கொஸ்தாபல் சாரதி, 2774 பேரும் பெண் உத்தியோகத்தர் 15 பேரும் அடங்குகின்றனர். இவ்வாறான வீரர்களுள் ஒவ்வொரு தராதரத்திலும் முதலில் இம்மாண்பு மிக்க ஸ்தாபனத்தை அடைந்தவர்களின் பெயர்பட்டியல் இம்மாண்புமிக்க தராதரத்தை அடைந்த இவ்வாறான வீரர்களின் ஒவ்வொரு தராதரத்திலும் அவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு அமையும்.
பிரதி பொலிஸ் மாஅதிபர் ரி.என்.த சில்வா அவர்கள் 18.12.1999 அன்று கொழும்பில்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகர் டெரன்ஸ் பெரேரா அவர்கள். 02.12.1987 அன்று பத்தரமுல்லையில்.
பொலிஸ் அத்தியட்சகர் பி. எச். எம். ஏ. ஹேரத் அவர்கள் 06.08.1984 அன்று வவுனியாவில்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயவர்தன அவர்கள் 10.04.1984 அன்று மெதிரிகிரியவில்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர அசோகா குமார அவர்கள் 28.07.1991 அன்று கஞ்சிகுடிச்ச ஆற்றில்
பொலிஸ் பரிசோதகர் எம். நெல் அவர்கள் 1898ம் ஆண்டு மருதானையில்.
உப சேவை பொலிஸ் பரிசோத கர் திசாநாயக்க அவர்கள் 05.05.1994 அன்று அம்பாறை சென்றல் காம்ப்பில்.
உதவிப் பொலிஸ் பரிசோதகர் பி. எல். திசாநாயக்க அவர்கள் 1917.02.17 அன்று ஹொரணையில்
உப சேவை பொலிஸ் பரிசோத கர் ஏ. எம். ஆரியதாஸ அவர்கள் 15.10.1988 அன்று அங்குணு கொலபெலஸ்ஸவில்.
பொலிஸ் சார்ஜன்ட் 2373 கே. டி. பி. ஜயநெத்தி அவர்கள் 15.05.1942 அன்று நாகொடையில்.
உப சேவை பொலிஸ் சார்ஜன்ட் 459 சி.ஆர்.எம். ஜோசப் அவர்கள் 19.08.1989 அன்று விசேட அதிரடிப்படை.
உபசேவை பெண் பொலிஸ் சார்ஜன்ட் 307 கமலா வீரசிங்க அவர்கள் 26.12.1990 அன்று தெஹிவளையில்.
பொலிஸ் கொஸ்தாபள் சபான் அவர்கள் 21.02.1864 மாவனல்லையில்
உப சேவை பொலிஸ் கொஸ்தா பல் 4943 சத்திவானந்தன் அவர்கள் 05.12.1978 அன்று யாழ்ப்பாணத்தில்.
பெண் பொலிஸ் கொஸ்தாபல் 244 பி. எச். எம். யசோ மெனிக்கே அவர்கள் 16.07.1989 அன்று ரங்காலயில்.
பெண் பொலிஸ் கொஸ்தாபல் 388 சோமலதா ஞானவர்தன அவர்கள் 13.08.1989 அன்று ரங்காலயில்
பொலிஸ் சார்ஜன்ட் சாரதி 12648 எம். எம். சிரிசேன அவர்கள் 31.08.1986 அன்று புல்மோட்டையில்
உபசேவை பொலிஸ் சார்ஜன்ட் சாரதி 58 பி. ஏ. தர்மசேன அவர்கள் 02.08.1986 அன்று தேசிய தகவல் கிளையில்.
பொலிஸ் கொஸ்தாபல் சாரதி 331 பி. பியதாஸ அவர்கள் 16.04.1971 அன்று கெகிராவயில்.
உபசேவை பொலிஸ் கொஸ்தாபல் சாரதி 25708 ஆ. குணசேன அவர்கள் 08.04.1991 அன்று தலைமன்னாரில்.
தேசத்தினதும் சேவையினதும் பொருட்டு உயிர் நீத்த பெண் அலுவ லர்கள் உட்பட சகல அலுவலர்களை யும் நினைவு கூர்ந்து 21.03.2010 அன்று எல்லா பொலிஸ் நிலையங்களிலும் கெளரவிப்பு உபசரிப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் பிரதான உற்சவம் 21.03.2010ம் திகதி காலை 7.00 மணிக்கு பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய அவர்களின் தலைமையில் திருகோணமலை பொலிஸ் தலைமை நிலையத்தில் அமைந்துள்ள உயிர் நீத்த வீரர்களின் நினைவு தூபி வளாகத்தில் நடாத்தப்படுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 20.03. 2010ம் திகதி ஸ்ரீ தலதா மாளிகையில் அன்னதானம் வழங்குவதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று நாட்டின் எல்லா பொலிஸ் பிரிவுகளிலும் உயிரை அர்ப்பணம் செய்த வீர மிக்க பொலிஸ் அலுவலர்கள் குடும்பத்தினருக்கும், சேவையில் இருக்கும் போது, ஊனமுற்ற பொலிஸ் உத்தி யோகத்தர்கள், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எல்லாத் தராதரத்திலும் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பல்வேறு சமூக நற்பணி நிகழ்வுகளை நடாத்துவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 32வது பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய அவர்கள் அவருடைய பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் பொலிஸ் சேவையை முன்னேற்றி ஒரு பொறுப்பு வாய்ந்ததும் பயனுடையதுமான புதிய பொலிஸ் யுகத்தை உருவாக்குவதற்குரிய அடித் தளத்தை பொலிஸ் சேவைக்கு அறி முகப்படுத்தி யுள்ளார். ஸ்ரீலங்கா பொலிஸ் சேவையின் கெளரவத்தையும், கீர்த்தியை யும் பாதுகாக்கும் பொருட்டு உயிரை தியாகம் செய்த சகல வீரர் களினது பெற்றோர்கள், மனைவிமார், பிள்ளைகள் உறவினர்களுக்கு சகல பொலிஸ் உத்தியோகத்தர்களின் கெளரவத்தையும் அன்பையும் தெரிவிக்கின்றோம்.
அனுர சேனநாயக்க,
பிரதி பொலிஸ் மாஅதிபர்,
குற்றவியல் பிரிவு
0 comments :
Post a Comment