Friday, February 5, 2010

SB க்கு பொது மன்னிப்பு : உடுநுவர அமைப்பாளர் : கண்டி மாவட்டத்தில் தேர்தலில்.

ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நீதிமன்றினை அவதித்து பேசியமைக்காக குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த திஸாநாயக்க, ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டு சிறைக்காலம் முடிவடைவதற்கு முன்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவிருந்த அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு ஐ.தே. கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.

நேற்று சுதந்திர தினமன்று ஜனாதிபதியினால் முழு பொது மன்னிப்பு எஸ்.பி திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் உடுநுவர பிரதேசத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ ல. சு. கட்சி சார்பாக அவர் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment