Thursday, February 18, 2010

தலாய்லாமா ஒபாமா இன்று சந்திப்பு. அமெரிக்காவின் உதவியை நாடுகின்றார்.

திபெத் விவகாரத்தில் இருதரப்புக்கும் ஆதரவான பரஸ்பர தீர்வு காண்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்த திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா வாஷிங்டன் வந்துள்ளார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு தன்னாட்சி அதிகாரம் கோரி போராடி வரும் தலாய்லாமா, சீனாவின் எதிர்ப்பையும் மீறு இந்த அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

திபெத் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுமாறு வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தலாய்லாமா பேச உள்ளார். வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடனும் தலாய்லாமா பேச உள்ளார்.

லாமாவின் அமெரிக்க பயணம் குறித்து அவரின் சிறப்புத் தூதர் லோதி கியாரி கூறுகையில்,
'சீனா, திபெத் ஆகிய இருதரப்புக்கும் பரஸ்பரம் நன்மை ஏற்படும் வகையில் நல்ல தீர்வுக்கு வழி சொல்லுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தலாய்லாமா பேச உள்ளார்.

மற்றபடி இருவரும் நோபல் பரிசு பெற்றவர்கள் என்ற வகையில் பல்வேறு உலக விஷயங்களை அவர்கள் விவாதிப்பார்கள்' என்றார்.


No comments:

Post a Comment