இனப்பிரச்சினையை தீர்க்க புதிய திட்டம்: இலங்கைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்
இலங்கையின் இன பிரச்னை தீர்வுக்கு புதிய திட்டம் ஒன்றை உடனடியாக அமலாக்க வேண்டும் என பிரிட்டன் அயலுறவுச் செயலாளர் டேவிட் மிலிபாண்ட், அதிபர் மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளார். கடந்த வருடம் மே மாதத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து, இலங்கையின் நிலவரம் குறித்து கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அரசாங்கத்துக்கு தனியாக இலங்கையின் இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான உயரிய வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரிட்டன் அயலுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை வரும் நாட்களில் லண்டனில் நடைபெறவுள்ள உலக தமிழர் மாநாட்டில், டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டு, இது தொடர்பாக வலுசேர்க்கவிருப்பதாக பிரிட்டன் அயலுறவுத்துறை அமைச்சக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே டேவிட் மிலிபாண்ட், உலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடையலாம் என பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக தமிழர் மாநாடு, தமிழீழ கோட்பாட்டை வலியுறுத்தி நிகழ்த்தபடுவதன் காரணமாகவே இந்த கருத்து நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மிலிபாண்ட் இலங்கையின் சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளையும், பிரச்சினைக்கான தீர்வையும் பெறுவதற்கு சில சாதகமான கருத்துக்களையே வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையில் மோசடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கருத்துக்களை தகர்க்கும் வகையில் துரிதமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது
0 comments :
Post a Comment