Saturday, February 20, 2010

இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌க்கு அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு: ‌தி.மு.க. பொது‌க்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம்

இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர் ‌‌பிர‌ச்‌சனை‌க்கு அ‌திகார ப‌கி‌ர்வு ஒ‌ன்றுதா‌ன் ‌நிர‌ந்‌தர ‌தீ‌ர்வு எ‌ன்று‌ம் அத‌ற்கான அ‌ர‌சிய‌ல் ‌‌‌தீ‌ர்வு காண முய‌ற்‌சிகளை ம‌த்‌திய அரசு மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌தி.மு.க. பொது‌க்குழு‌ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது. முதலமை‌‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற ‌தி.மு.க. பொது‌க்குழு‌வி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்களில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ம‌த்‌திய க‌ல்‌வி‌த்துறை சா‌ர்‌பாக கொ‌ண்டு வர ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ள உய‌ர்க‌ல்வ‌ி ஆணைய மசோதாவை ம‌த்‌‌திய அரசு கை‌விட‌ வே‌ண்டு‌ம் எ‌ன்பதோடு க‌ல்‌வி துறை‌யி‌ல் மா‌நில‌ங்களு‌க்கு முழுமையான சுயா‌ட்‌சி உ‌ரிமை வழ‌ங்‌கிட வகை செ‌ய்யு‌ம் முறை‌யி‌ல் க‌ல்‌வி அர‌சிய‌ல் அமை‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ல் க‌ல்‌வியை பொது ப‌ட்டிய‌லி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்‌கி ‌‌மீ‌ண்டு‌ம் மா‌நில ப‌ட்டிய‌லி‌ல் சே‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.

* இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சொ‌ந்த வா‌ழ்‌விட‌ங்களு‌க்கு ‌திரு‌ம்பவு‌ம், அவ‌ர்களது ந‌ல்வா‌ழ்வு‌க்கான உத‌விக‌ள் இல‌ங்கை அர‌சினா‌ல் வழ‌ங்க‌ப்படவு‌ம், ம‌த்‌திய அரசு இல‌ங்கை அரசை வ‌லியுறு‌த்த‌ வே‌ண்டு‌ம். ஏ‌ற்கனவே உறு‌‌தி அ‌ளி‌த்தபடி இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்கு அ‌திகார‌‌ப்ப‌கி‌ர்வு செ‌ய்வது ஒ‌ன்றுதா‌ன் ‌நிர‌ந்தர வா‌ழ்வு‌க்கு வ‌‌ழி வகு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், அத‌ற்கான அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு கா‌ண்பத‌ற்கு தேவையான முய‌ற்‌‌சிக‌ள் அனை‌த்தையு‌ம் ம‌த்‌திய அரசு ‌விரை‌வி‌ல் மே‌ற்கொ‌ள்ள ஆவன செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

* இல‌ங்கை கட‌ற்பட‌ை‌யின‌ர் த‌மிழக ‌மீன‌வ‌ர்களை ஏ‌வி‌விடு‌ம் வ‌ன்முறை கொடுமைகளு‌க்கு ‌நிர‌ந்தரமான முடி‌வினை ஏ‌ற்படு‌த்‌திடு‌ம் வகை‌யி‌ல் ம‌த்‌திய அரசு உறு‌தியான நடவ‌டி‌க்கைகளை உடனடியாக மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com