முன்னாள் புலிகளை குடியேற்ற புதிய மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளது.
புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ள புலிகளியக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களை தங்கவைப்பதற்கு தனயான மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு விடயங்களுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தெரித்துள்ளதாவது:
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் முன்னாள் உறுப்பினர்கள் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் 18 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போர் காலத்தில் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்கள்.
மற்றவர்கள் போரின் போதும், போருக்கு பின்னும் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பிரத்தியேகமாக இவர்களுக்கென்று தனியாக சமுதாய கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை அரசு வழங்குவதற்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் ஆரம்பிக்கும்.
இதற்காக ஏற்கனவே இடங்களையும் தேர்வு செய்தாகிவிட்டது. முதல்கட்டமாக 200 குடும்பங்களை குடியமர்த்துவோம். தற்போது முகாம்களில் 3 ஆயிரம் பேர் திருமணமானவர்கள். அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றார்.
0 comments :
Post a Comment