பேரியல் அஷ்ரப் , நந்தன குணதிலக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைகின்றனர்.
(மேலதிக இணைப்பு படங்களுடன்) அமைச்சுர் பேரியல் அஷ்ரப் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார். இலங்கை வரலாற்றில் முதலாவது கபினட் அமைச்சராக விளங்கிய அவர் தனது கணவரான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்கள் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததன் பின்னர் அரசியலில் நுழைந்திருந்தார்.
இன்று காலை அலறி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான அங்கத்துவப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வில் அவர் தலைமை வகிக்கும் தேசிய ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் சுமார் 250 பேர் வரை கலந்து கொண்டுள்ளனனர்.
அத்துடன் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் நவ்ஸாட் அவர்களும் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு தனக்குரிய அங்கத்துவ பத்திரத்தை ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதே நேரம் ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று விமல் வீரவன்ச தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சுதந்திர முன்னணி யின் பொதுச் செயலாளரான நந்தண குணத்திலகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
விமல்வீரவன்சவை பிரித்ததன் ஊடாக ஜேவிபி யை பலவீனப்படுத்திய சக்திகள் தற்போது அவருடன் உள்ளவர்களை ஒவ்வொருவராக பிரித்து விமல் வீரவன்சவை தனிமைப் படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment