Monday, February 8, 2010

இரானுக்கு மேற்கத்தைய நாடுகள் கண்டனம்

இரானிய அரசு யூரேனியம் செறிவூட்டலை மிக உயர்ந்த தரத்திற்கு மேற்கொள்ளவிருப்பதாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் குறித்து மேற்கத்தைய நாடுகள் மிகவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இதற்கு அடுத்த கட்டம் இரான் அணு ஆயுதம் தயாரிப்பது தான் என்று மேற்குலக அரசுகள் கருதுகின்றன. இரானின் நடவடிக்கையை பிரிட்டனும் ஜெர்மனியும் கண்டனம் செய்துள்ளன.

இரான் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் அதன் மீது ஏற்றுமதி தடைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக நாடுகள் இனி முயல வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க உதவியுடன் நடத்தப்படும் பாரசீக மொழி வானொலியுடன் தொடர்புடையவர்கள் என்றும், அமெரிக்காவுக்கு ஒற்றர்களாக வேவு பார்த்தவர்கள் என்றும் இரானியர்கள் சிலரை இரான் அரசு கைது செய்துள்ளது.

No comments:

Post a Comment