Friday, February 12, 2010

ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமைகளை கவனிக்க விசேட வைத்தியர்கள் குழு.

ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமைகளை கண்காணிக்க விசேட வைத்தியர்கள் குழுவொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். இவ்வைத்தியக் குழு 24 மணி நேரம் விழிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படின் இராணுவ வைத்தியசாலையில் வைத்திய ஆலோசர் மேஜர் ஜெனரல் எஸ்-எச் முனசிங்கவிற்கு ஜெனரல் பொன்சேகாவோ அவரது மனைவியோ எந்த நேரத்திலும் அழைப்பபை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கதினரை தொடர்பு கொண்டு தனது கணவனுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளை தீர்பதற்கு உதவுமாறு கேட்டிருந்தார். ஜெனரல் பொன்சேகா மூன்று தடவைகள் குண்டுத்தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அதன்போது அவரது உடலில் புகுந்துள்ள சில குண்டுத்துகள்கள் இதுவரை நீக்கப்படவில்லை எனவும் , இறுதியா இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குலில் தனது கணவரில் ஈரலுக்கு அண்மித்தபகுதில் 1 அங்குல நீழமான குண்டுத்துகள் ஒன்று இருப்பதாகவும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அவர் ஒவ்வொரு ஆறுமணி நேரமும் மாத்திரைகள் எடுக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், தனது கணவனின் உடல் நிலைமை தொடர்பான முழு விபரமும் இராணுவ வைத்தியசாலையின் இயக்குனருக்கே தெரியும் எனவும் அவரை தொடர்ந்தும் தனது கணவனின் உடல் நலத்தினை கவனிக்க அனுமதிக்குமாறும் வேண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com