Friday, February 5, 2010

யோசித்த ராஜபக்சவை இராஜனாமா செய்ய கோருகின்றது ஐ.தே.கட்சி.

சேவையிலிருந்த வண்ணம் அரசியலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 இராணுவ உயரதிகாரிகளை கட்டாய ஓய்வில் அரசாங்கம் அனுப்பியுள்ளது. அவ்வாறாயின் கட்டாய ஓய்வில் முதலில் அனுப்பப்படவேண்டியவர் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்சவே என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, யோசித்த தேர்தல் பிரச்சார பேரணிகளிலும் வேறு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டதற்கான வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்களுடனான ஆதாரங்களும் உண்டு என தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டம் ராஜபக்சவிற்கு ஒருவாறும் பிறருக்கு ஒருவாறும் இருக்க முடியாது என தெரிவித்த பா.உ கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் இராணுவத்திலிருந்து சட்டப்படி ஓய்வு பெற்றிருந்தவர்கள் என தெரிவித்துள்ளதுடன் அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையில் ஓர் அறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரா மகிந்த ராஜபக்சவை கொல்லத்திட்டமிட்டதாக குற்றஞ்சுமத்தப்படும் பயத்தில் அவர்கள் உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment