Friday, February 5, 2010

முன்னாள் பிரதம நீதியரசரின் தீர்ப்புக்களை விசாரிக்க விசேட குழு.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களின் தீர்புக்கள் தொடர்பாக விசாரணைகளை நடாத்த விசேட குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் என ஜனாதிபதியை வேண்டவுள்ளதாக அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்களை ஆதரித்து அவர் பிரச்சாரங்களை செய்து வந்திருந்தார். அத்துடன் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அவர் தலைமையில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த காபந்து அரசாங்கத்தில் சரத் என் சில்வா முக்கிய பதவியை வகிப்பார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சரத் என் சில்வா அவர்களால் வழங்கப்பட்டுள்ள தீர்புகள் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்படும் விசேட குழு வடகிழக்கு பிரிப்பு தொடர்பான தீர்பினையும் விசாரிக்குமா என்பதும் கேள்வியே.

No comments:

Post a Comment