Wednesday, February 10, 2010

ஜெனரல் பொன்சேகாவின் கைதினை கண்டித்து எதிர்கட்சிகள் சத்தியாக்கிரகம்.


கல்வீச்சு , கண்ணீப்புகை , தடியடி.
முன்னாள் இராணுவத் தளபதியும் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் பொன்சேகாவின் கைதினை கண்டித்து எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து இன்று புதுக்கடை பிரதேசத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடாத்தினர். குறிப்பிட்ட சத்தியாகிரக போராட்டம் அரசின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக முன்னணி ஊடகங்கள் யாவும் தெரிவிக்கின்றன. அதே நேரம் தமது அமைதியான போராட்டத்தினை அரசங்கத்தின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் அனுசரணையில் இயங்கும் குழுவொன்று தாக்கியதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கண்டுநெந்தி தெரிவித்துள்ளார்.

சத்தியாகிரகம் இடம்பெற்ற இடத்திற்கு வாகனங்களில் இரும்புப்பொல்லுகள் , தடிகள் கொண்டுவந்து இறக்கப்பட்டதாக நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரம் சத்தியாகிரகம் இருந்தவர்கள் மீது கல், போத்தல், பொல்லுகளை காடையர்கள் வீசியுள்ளனர். இச்சம்பவம் இடம்பெறுகையில், தாம் தாக்கப்படுவதை தடுக்க பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இறுதியாக பொலிஸார் சத்தியாகிரகம் இருந்தவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும், தண்ணீர் வீச்சு என்பவற்றை மேற்கொண்டுள்ளதுடன் தடியடிப்பியோகமும் செய்துள்ளனர்.

சந்தியாகிரகம் இருந்தவர்களும் பதிலுக்கு தாக்கியதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com