இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தப்போவதாக ஐ.நா. அறிவிப்பு
இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டங்களில் நடந்த போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என தாம் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெறும் உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களுக்கான ஐந்தாவது மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய நவநீதம்பிள்ளை, இலங்கை விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தவிடயத்தில் தேசிய ரீதியான விசாரணைகள் சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை அங்கு போர்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்று தான் சந்தேகிப்பதாகவும், நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்றும் அது சுதந்திரமானதாகவும், நம்பகத்தன்மையுடனும் அமையவேண்டும் என்றும் தான் வலியுறுத்தி வருவதாகவும் நவநீதம்பிள்ளை கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறுதிப்பாட்டை பெறும் முயற்சியில் ஐ. நா.சபையின் செயலாளர் பான் கீ மூன் தீவிரமாக செயற்பட்டு வருவதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக போரின் போதும், அதற்குப் பிறகுமான காலகட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமல்லாமல், தேர்தலுக்குப் பிறகு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று இலங்கை அமைச்சரிடம் தாம் கூறியதாகவும் அவர் கூறினார்.
ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் அவையில் இந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் குறித்து தமது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ள்ளார்.
எனினும் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக எந்த ஒரு சர்வதேச விசாரணைகளுக்கும் இடம்தரப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
4 comments :
Shan-Australia
Seems like, Navi (Amma) has been bribed by the SL Disapora terrorist network.
She should worry about the deaths of hundreds of thousands innocent civilians in Iraq and Afghan and bring those who responsible to justice before she favours the SL disapora terror network.
She knows well that the Iraq war was illegal anyway, Bush and Blair went to war without the 2nd UN resolution.
Hello Navi Madam,
You are supporting the terror disapora network, Is it just you belong to this cast? or You've been bribed?
More than 200,000 innocent civilians have been killed in Iraq and Afghan, Does it not fall under human rights abuse?
What you gonna do about Bush and Blair for carrying out the illegal war?
Do you not have the guds to raise your voice on this matter?.
Prabha slaughtered thousands of lives and kicked sinhalese and muslims from the North, what's your thoughts about that?
WARNING LADIES AND GENTLEMEN !!!
Apparrently Navi is also a secret member of the Terror Disaport Network.
Watch out for this witch.
UN Human Rights High Commissioner Ms
pillai known to us as a head of the supreme court of Africa.That's all.Her partial statements regarding our government is clearly indicates something behind the scene.Our country is looking for peace harmony and prosperity.There are plenty of countries in the list,just try to find out what's happening there and make statements which we think could be suitable for your job.
Post a Comment