Friday, February 12, 2010

மட்டக்களப்பில் ஆயுதங்கள் மீட்பு : கல்கிசையில் ஒருவர் கிரனேட்டக்களுடன் கைது.

மட்டக்களப்பு விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனதீவு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளன. 5.5 மிமி ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்று , அதற்கான ரவைகள் 40, வெளிநாட்டு தயாரிப்பு கிரனேட்டுக்கள் 4, உள்நாட்டு தயாரிப்பு கிரனேட்டுக்கள் 3, மிதிவெடிகள் 22, சீ4 ரக வெடிமருந்து 2 கிலோகிராம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் கல்கிசை பிரதேசத்தில் நான்கு வெளிநாட்டு தயாரிப்பு கிரனேட்டுக்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நபர் அப்பிரதேசத்தில் இடம்பெற்றுவந்துள்ள 40 மேற்பட்ட வீடுடைப்பு கொள்ளைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

1 comments :

Anonymous ,  February 12, 2010 at 7:18 PM  

The government should take action on the dangerous criminals and put them behind the bars with long term severe sentences.It's really sad to hear that criminals and goons with dangerous weapons just moving around Srilanka,whereas the police department says,they're on alert.The government should take maximum step to wipe out the dangerous criminal activities and the sponsors of the
criminal gangs of the country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com