திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்தித்துப் பேசக் கூடாது என்றும், அவ்வாறு பேசினால் சீன - அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சமீபத்தில் நடத்திய பேச்சு வார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும், இரு தரப்பினரும் தங்களது நிலையில் பிடிவாதத்துடன் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீன பிரதிநிதி ஜு விக்குன், இந்த மாத இறுதியில் தலாய் லாமா அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, தலாய் லாமாவை சந்திக்கக் கூடாது என்றும் கூறினார்.
எனினும் இந்த சந்திப்பு நிகழ இருப்பதாக இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் உள் விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் விக்குன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment