Saturday, February 6, 2010

இலங்கையின் தேசியக் கொடியினை உதாசீனம் செய்த நபர் லண்டனில் கைது.

இலங்கையில் இடம்பெறுவதாக குற்றஞ்சுமத்தப்படுகின்ற ஜனநாயக மீறல்களுக்கு எதிராக ஜேவிபி யினரால் லண்டனில் சுதந்திர தினத்தன்று நாடாத்தப்பட்ட ஆர்பாட்டத்தினுள் நுழைந்து கலகம் ஏற்படுத்த முற்பட்டதுடன் இலங்கையின் தேசியக் கொடியினை உதாசீனம் செய்த நபர் ஒருவர் லண்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சுதந்திர தினமன்று இலங்கையில் ஊடகவியலாளர்கள் நசுக்கப்படுவது, லங்கா இரிதா பத்திரிகை சீல் வைக்கப்பட்டமை, தேர்தல் வன்செயல்கள் மற்றும் தேர்தல் முடிவுகளில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற முறைகேடுகள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை வலியுறுத்துமுகமாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பிரித்தானியக் கிளையினர் லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

ஜேவிபி யினரின் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு பெப் 4ம் திகதி 2 மணியிலிருந்து 4 மணிவரை பிரித்தானியா பொலிஸாரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சட்டரீதியான அனுமதியுடன் ஜேவிபி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை சுமார் 15.30 மணியளவில் புலிகளின் ஆதரவாளர்கள் என நம்பப்படுவோர் சிலர் புலிகளின் கொடிகள் , தமிழீழ வரைபடங்கள் சகிதம் ஜேவிபி யின் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்துள்ளனர். புலிகள் தீய நோக்குடன் இணைந்துள்ளார்கள் என்பதை அவதானித்த ஜேவிபி யினர் தமது ஆர்ப்பாட்டத்தினை குளப்பும் நோக்குடன் புலிகள் வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அன்று இலங்கையின் சுதந்திர தினமாகையால் தூதரகத்திற்கு மேலதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்துள்ளது. முறைப்பாட்டை ஏற்று அவ்விடத்திற்கு ஒரு சில நிமிடங்களில் விரைந்த பொலிஸார் அங்கு அனுமதியின்று தீங்கு விளைவிக்கும் நோக்கில் வந்திருந்த புலிகளின் ஆதரவாளர்களை மடக்கி வேறுபடுத்தினர். அவ்வேளையில் இலங்கையின் தேசியக் கொடியினை நிலத்தில் போட்டு காலால் மிதித்து அதற்கு தீமுட்ட முனைந்த நபர் ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்துடன், தேசியக் கொடி தீமூட்டப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவருடன் அங்கு சென்றிருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவரும் குறிப்பிட்டு நபர் தண்டனைக்கு உள்ளாகலாம் என நம்பப்படுகின்றது.

இலங்கையின் சுதந்திரதினத்தினை முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளதாக கூறப்படுகின்ற இத்தருணத்தில் புலம்பெயர் புலிப்பினாமிகள் தொடர்ந்தும் வன்முறைகளையே விரும்பி வருகின்றனர்.










2 comments :

மூர்த்தி ,  February 6, 2010 at 7:50 PM  

என்னங்கடா செய்யிறானுகள் . வவுனியாவில முன்னாள் போரளிகள் சுதந்திதினத்தன்று ஆடிப்பாடி கும்மாளம் அடிக்கிறாங்கள். இவனுகள் இங்க லவ்ஸ் அக்கிறத்துக்கு கூப்பாடு போடுறானுகள். சரி சரி மாமி வீட்டு சாப்பாட்டோட நம்ம ஒன்னு வீடொன்னு என்று இருப்பானுகளா என்டு பாப்பம்.

mayuran ,  February 6, 2010 at 7:54 PM  

மூர்த்தி உங்களுக்கு மண்டைப்பழுதோ! நாய்வால் நிமிர்த்த முடியாது என்று தெரியாதோ.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com