Thursday, February 4, 2010

தமிழ்நாட்டில் விடுதலை கேட்டு மரம் ஏறிப் போராடிய இலங்கை அகதிகள்

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு முகாமில் நீதி கேட்டு இலங்கை அகதிகள் மூன்று பேர் மரத்தில் ஏறிப் போராட்டம் நடத்தினர். முகாமுக்குள் காலை முதல் மாலை வரை 60 அடி மரத்தின் உச்சியிலேயே இருந்த ரமணா (33), முகம்மது ருஷ்கான் (24), சேகர் (27) என்ற அந்த மூவரும் மாலையில் பெரிய போலிஸ் அதிகாரிகள் வந்த பிறகே கீழே இறங்கினர்.

இறங்கியதும் தரையில் இருந்த மற்ற அகதிகளுடன் சேர்ந்து மொத்தம் 33 பேர் குந்தியிருப்புப் போ„ட்டம் நடத்தினர். அந்த முகாமில் மூன்று ஆண்டுகாலமாக தாங்கள் விசாரணை இன்றி அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். தங்களுடைய மனைவி, குழந்தைகள் எல்லாரும் வேறு அடங்களில் முகாம்களில் இருக்கையில் தாங்கள் மட்டும் அடைக்கப்பட்டு இருப்பது ஏன் என்று அவர்கள் கேட்டனர்.

தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் தங்கள் மீது குற்றம் சுமத்தினால் தாங்கள் நிரபராதிகள் என்பதை மெய்பிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்ர்கள்.
போராட்டம் செய்தி வந்ததும் முகாமுக்குச் சென்ற போலிஸ் அதிகாரிகள் மரத்தில் இருந்த அகதிகளை சமரசப்படுத்தி கீழே இறங்கச் செய்தனர்.

இந்த அகதிகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படியே தாங்கள் நடந்து கொள்வதாகத் தெரிவித்த போலிஸ் அதிகாரிகள், இந்த அகதிகள் விடுவிக்கப்பட்டு திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பப்படுவது மாநில அரசின் கையில் இருக்கிறது என்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com