Tuesday, February 2, 2010

ஐ.தே.கட்சிக்கு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இல்லையாம்.

எதிர்வரும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி பகிஸ்கரிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்துள்ள தேர்தலின் பிரதான வேட்பாளரும் முப்படைகளின் முன்னாள் பிரதானியுமான ஜெனரல் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு அரசு கொடுக்கும் தொந்தரவுகளைச் சுட்டிக்காட்டவே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் சுதந்திரம் எங்கே இருக்கின்றது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகம் ஒன்றுக்கு பேசுகையில், சுதந்திர தினமானது சுதந்திரத்தினை கொண்டாடுவதற்கானதாகும். ஆனால் இங்கே எங்கு சுதந்திரமிருக்கின்றது. ஊடகவியலாளர்கள் நசுக்கப்படுகின்றார்கள். மக்கள் கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள். சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் இந்நிலையில் இவ்வியங்களை சுட்டிக்காட்டவே எமது கட்சியின் உறுப்பினர்கள் கூடி சுதந்திர தினக் கொண்டாட்டங்களைப் பகிஸ்கரிப்பதென்ற முடிவை எடுத்திருக்கின்றோம் என தெரிவிதுள்ளார்.

அத்துடன் மேற்படி விடயங்கள் சம்பந்தமாக கண்டியில் உள்ள பௌத்த பிக்குகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பீடத்தினர், அதன் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா தலைமையில் சென்று விளக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment