Wednesday, February 10, 2010

ஆஸி.: அரசு இணைய தளங்கள் செயலிழப்பு

ஆஸ்ட்ரேலியாவில் அரசு இணைய தளங்களை 'அனானிமஸ்' என்னும் இயக்கம் செயலிழக்கச் செய்துள்ளது. பாலுணர்வுகளைத் தூண்டுகிற, குழந்தைகளுக்கெதிரான கொடுமைகளை அரங்கேற்றுகிற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் மாறும் செய்தித் தொகுப்புகளைத் தரும் இணைய தளங்களை தடை செய்யும் முயற்சியில் ஆஸ்ட்ரேலிய அரசு ஈடுபட்டுள்ளது.

அரசின் இந்த தடை நடவடிக்கைக்கு ஏறத்தாழ 80 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதை விரும்பாத 'அனானிமஸ்' என்னும் இயக்கம், அரசின் இந்த முயற்சியை எதிர்த்து வருகிறது.

மேலும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இணைய தளங்களில் 'ஹேக்' செய்து அத்துமீறி நுழைந்து ஆஸ்ட்ரேலிய அரசு இணையதளங்களை செயலிழக்கச் செய்துள்ளனர். தகவலறியும் உரிமையை எங்களிடமிருந்து எவரும் பறித்துவிட முடியாது என்று அந்த இயக்கம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment