Monday, February 8, 2010

பிரிட்டனில் கடுமையான மாணவர் விசா விதிமுறைகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக பிரிட்டன் அறிவித்த சில நாட்களில் புதிய அறிவிப்பு ஒன்றையும் அந்நாடு வெளியிட்டுள்ளது.
மாணவர் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் அலன் ஜான்சன் கூறினார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசா எண்ணிக்கை குறைக்கப்படவிருப்பதாக அவர் சொன்னார். வெளிநாட்டு மாணவர்கள் குடிநுழைவு விதிமுறைகளை மீறாமல் இருக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் திரு ஜான்சன் கூறினார்.

“உண்மையாக நடந்துகொள்ளக்கூடிய வெளிநாட்டு மாணவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மாணவர் விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வேலை செய்வதற்காக வரும் மாணவர்களைத் தடுக்கும் நோக்கத்தில் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன,” என்றார் ஜான்சன்.

வட இந்தியா, நேப்பாளம் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக பிரிட்டன் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment