Tuesday, February 16, 2010

மாகா சங்கத்தின் பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டதை அடுத்து நாடு சர்வாதிகாரப்போக்கில் செல்வதாகவும் இவ்வாறான தருணங்களில் தேரர்கள் ஒன்றிணைந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் எனவும் இலங்கை பூராகவும் உள்ள தேரர்களுக்கு பௌத்த பிக்குக்குளின் பிரதான நான்கு பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ரமஞன ஆகிய பீடங்களைச்சேர்ந்த பிரதான பிக்குகளால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவ்வழைப்பில் எதிர்வரும் 18ம் திகதி அனைவரையும் கண்டி நகரில் ஒன்று கூடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழைப்பினை ரத்துச் செய்துள்ள மகா சங்கத்தினர் காலவரையறையின்றி அவ் ஒன்று கூடலை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதேநேரம் நேற்று மல்வத்த பீடத்து மகாநாயக்கர் நாட்டின் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

1 comment:

  1. Buddhist Monks are the most repected
    people among the Buddhist society,as they are the deciples of lord Buddha.They should always keep themselves away from the dirty politics.Politics is the place where acrobats make their performances.And not the respected Buddhist monks.You have enough to preach.Thank you.

    ReplyDelete