Monday, February 1, 2010

ஐ.தே. முன்னணியின் பிரதமர் வேட்பாளர் ரணில் : பிரதித் தலைவர் சரத் பொன்சேக்கா.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க அந்த முன்னணி தீர்மானித்துள்ளது. முன்னணியின் பிரதித் தலைவராக ஜெனரல் சரத் பொன்சேக்காவை நியமிப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைப்பாளர் பதவியொன்றை பெற்றுக்கொள்ளுமாறு சரத் பொன்சேக்காவிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அவர் ஜனாதிபதித் தேர்தலிலில் அன்னப்பறவைச் சின்னத்தில் தான் போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் ஊடக ஐக்கிய தேசிய முன்னணியில் எண்ணியிருப்பதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடாக போட்டியிடுவதென அதில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் நேற்று தீர்மானித்துள்ளன. ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற விசேடக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. புதிய கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜே.வி.பி புதிய அரசியல் கூட்டணியொன்றின் கீழ் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் இதுதொடர்பான உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்காக அடுத்த சில தினங்களுக்குள் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூடி கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

வெகுஜன அமைப்புகள், புத்திஜீவிகள் பலரைக் கொண்டு கட்டியெழுப்பப்படும் இந்தக் கூட்டணி எந்தச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.










No comments:

Post a Comment