Saturday, February 27, 2010

புலிகளின் உள்வீட்டு மோதல். சுவிஸ் தமிழர் பேரவைத் தலைவருக்கு தர்ம அடி.

பிளவுபட்டுள்ள புலிகளியக்கத்தின் உள்வீட்டு விவகாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகிளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என உலகின் முன்னணி அரசசார்பற்ற அமைப்புக்களுக்கும், உலகில் உள்ள சில நாட்டு அரசாங்கங்ளுக்கும் எழுத்துமூலமாக வேண்டுகோள் விடுத்திருந்த சுவிஸ் தமிழர் பேரவை எனும் அமைப்பின் தலைவர் நமசிவாயத்திற்கு புலிகளின் ஒரு பகுதியினர் சில தினங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தர்ம அடி வழங்கியதாக தெரியவருகின்றது.

இவர் தாக்கப்பட்டமை தொடர்பாக இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் நமசிவாயம் தன்னை புலிகளின் ஆதரவாளர் என மக்களுக்கு காட்டிக்கொண்டுள்ள இரட்டை ஏஜென்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டில் புலிகளின் வன்முறைகளை எதிர்த்து ஜனநாயகத்தினை வலியுறுத்தி வந்த தனிநபர்களுக்கு புலிகளால் பல தடவைகள் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த நபர்களில் சிலர் தற்போது ஒரிரு வருடங்களின் பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. புலிகளிடையே உருவாகியுள்ள உள்மோதல்களின் விளைவாகவே இவ்விடயங்கள் கசிவதாக நம்பப்படுகின்றது. முன்னொருகாலத்தில் ஒன்றாக இருந்து அராஜக செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது மாறிமாறி காட்டிக்கொடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment