குரொட்சியா நாட்டிற்கு இலங்கை தனது பிரதிநிதியை நியமித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் குரொட்சியா நாட்டிற்கு தனது பிரதிநிதியாக Mr. Marko Vojkovic, அவர்களை நியமித்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோகித்த போகல்லாகம அவர்களால் கையொப்பமிடப்பட்ட நியமனப்பத்திரம் Mr. Marko Vojkovic, அவர்களுக்கு அவுஸ்திரியாவுக்கான இலங்கை தூதரகத்தில் வைத்து இலங்கை தூதர் திரு. எம்.எம்.ஜவ்ஃபர் அவர்களால் கடந்த 4 ம் திகதி சுதந்திர தினமன்று வழங்கப்பட்டுள்ளது.
Mr. Marko Vojkovic, அவர்கள் குரொட்சியா நாட்டில் வர்த்தக சம்மேளனத்தின் முக்கிய புள்ளியாக விளங்கி வருகின்றார். அவருக்கு அந்நாட்டில் உல்லாசத் துறையில் பெரும் பங்கு உண்டு என்பதுடன் சொந்தமாக பிரபலமான ட்ரவல்ஸ் அன்ட ருவர்ஸ் ஒன்றையும் வைத்துள்ளார்:
0 comments :
Post a Comment