Wednesday, February 3, 2010

மலேசியாவில் வெளிநாட்டினருக்கு கடுமையான விசா விதிமுறைகள்.

மலேசிய அரசாங்கம் வெளிநாட்டினருக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்கவிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் கூறியது. மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் விரும்பத் தகாதவர்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கவும் புதிய விதிமுறைகள் வழிவிடும் என்று மலேசிய அரசாங்கம் கூறியது.

மலேசியாவுக்குள் நுழைய தற்போது விசா தேவைப்படும் அனைத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் “தனி நபர் மதிப்பீடு” அடிப்படையில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போதைய விசா விதிமுறைகளில் உள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் விரும்புவதாக உள்துறை அமைச்சு கூறியது.

சந்தேக நபர்களுக்கு விசா நிராகரிக்கப்படுவதற்கு புதிய விதிமுறை வழி வகுக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

No comments:

Post a Comment