Wednesday, February 3, 2010

அவுஸ்திரேலியாவில் குற்றத்தை ஒப்புக் கொண்ட புலிகள்.

புலிகளுக்கு நீதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்த புலிகளியக்க ஆதரவாளர்கள் மூவர் தாம் புலிகளுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை சேகரித்து கொடுத்தாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகளியக்கத்திற்கு கடந்த 2004-2007 ம் ஆண்டுக்குட்பட்ட காலப்பகுதியில் அருணன் வினாயகமூர்த்தி, சிவராஜா யாதவன், ஆறுமுகம் ரஜீவன் ஆகிய மூவரும் நிதி சேகரித்தமை பாரிய தண்டனைக்குரிய குற்றமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்பது மட்டுமல்ல அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகளின் தலைமையுடன் மிகுந்த நெருக்கத்தை கொண்டுள்ளனர் என தெரிவித்த அரச தரப்பு வக்கீல், அவர்களில் அருண் வினாயகமூர்த்தி வானொலி தொடர்பு சாதனக் கருவிகளை புலிகளுக்கு வழங்கியதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார் எனவும், அவர் புலிகளின் துணைப்படையாக இலங்கையில் செயற்பட்டுள்ளதுடன் தெருவோர குண்டுகளையும் வெடிக்கவைத்து உயிர்களுக்கு தீங்கு விளைவித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment