Monday, February 8, 2010

பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். கோத்தபாய.

கடந்த தேர்தலில் அரசியலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச டெய்லி நியூஸ்பேப்பருக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகா வெல்வார் என்ற எதிர்பார்ப்பில் பல பொலிஸார் ஒன்றிணைந்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு சார்பாக செயல்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுமிடத்து சேவையிலிருந்து நீக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவர்கள் தேர்தல் முடிந்த மறுகணம் 208 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும்படியான இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தது. சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர்களான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனரும் மேலதிக பொலிஸ் பேச்சாளருமாக செயற்பட்டுவந்த நிமால் மெதிவக்க, வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கே, மற்றும் சிரேஸ்ட டிஐஜி, எஸ்எஸ்பி, எஸ்பி, ஏஎஸ்பி க்கள் உட்பட 99 உயரதிகாரிகளும் 109 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாதிகளும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment