Thursday, February 18, 2010

ஜெனரல் - ஜேவிபி வெற்றிக்கிண்ணச் சின்னத்தில்

எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி யானைச் சின்னத்தை கைவிடுவதில்லை என்ற முடிவை அடுத்து ஜேவிபி மற்றும் ஜெனரல் பொன்சேகா தரப்பினர் ஜனநாயக தேசிய முன்னணி எனும் அமைப்பின் கீழ் வெற்றிச்கிண்ணச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக ஜெனரல் பொன்சேகாவும் , செயலாளராக ஜேவிபியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத்தும் செயற்படுகின்றனர்.

எதிர்கட்சிகளின் கூட்டாக அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிட வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிற்கு ஜெனரல் பொன்சேகாவினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அக்கடிதத்திற்கு சாதகமான பதிலொன்று கிடைக்காததையிட்டு ஜெனரல் தரப்பினரும் ஜேவிபி யும் தனிக் கூட்டணி அமைத்துள்ளது. அக்கூட்டில் அர்ஜூனா ரணதுங்கவும் இடம்பெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

1 comment:

  1. The contestors can select any symbol for the contest as they wish.It doesn't make any sense with the life of the ordinary citizen.The party's policy and the devotion to the party policy by the members of the particular party is very significient
    and symbolic.Try to do or organize something better for the needy people
    You should try to win the heart of the people and not to show your guts to challenge and waste your precious time.Thank you.

    ReplyDelete