Friday, February 12, 2010

அஸ்கிரிய மகாசபை அவசர அவசரமாக கூடுகின்றது.

நாட்டின் பௌத்த மதகுருக்களின் தலைமைச் சங்கமாகிய அஸ்கிரிய மகாநாயக்கர்களின் மகாசபை அவசரமாக கூடவுள்ளது. இச்சபையானது நாட்டில் உள்ள சகல பௌத்த விகாரைகளையும் , பௌத்த பிக்குக்களையும் உள்ளடக்கியதாகும்.

அஸ்கிரிய மகா சபை எதிர்வரும் 18ம் திகதி அவசரஅவரசமாக கூடவுள்ளதாகவும் , நாட்டில் ஜனநாயகமும் , சிறந்த ஆட்சியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பொதுக் கூட்டத்திற்கு நாட்டில் உள்ள சகல பௌத்த விகாரைகளுக்கும் அழைப்பு பிரத்தியேகமாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வழைப்பிதளில் மல்வத்தை பீட மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்போட்டுவாவெ சிறி சுமங்கல தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் சங்கைக்குரிய உடுகம சிறி புத்தாறக்கித்த தேரர், அமரபுர பீட மகாநாயக்கர் சங்கைக்குரிய டவுல்தனிய ஞானிஸ்ஸர தேரர், ரமங்கன பீட மகாநாயக்கர் சங்கைக்குரிய வௌல்தெனிய மெடல்லங்கார தேரர் ஆகியோர் கையொப்படமிட்டுள்ளனர்.

அழைப்பிதழில் நாட்டின் வரலாற்றில் பெரிய பங்களிப்புக்களை செய்துள்ள பௌத்த பிக்குகள் நாட்டில் உருவாகிவரும் அப்பட்டமான ஜனநாயக மீறல்களை கண்டுகொண்டு அமைதிகாக்க முடியாது என கூறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

இது நாட்டில் பாரிய அனர்த்தம் ஒன்றுக்கு கூட வழிகுக்க முடியும் என பலரும் அச்சம் கொள்ளக்கூடிய ஒர்நிலையை உருவாக்கியுள்ளது.


1 comments :

Anonymous ,  February 12, 2010 at 7:06 PM  

Religion and politics are completely different matters.Religious institutions and religious heads always should keep themselves a little away from the politics,but they've the rights to call the head of the government to warn,encourage or advise.But it's unfair to get on to the streets with their robes,because they are symbolic of the religion which loves peace and harmony

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com