Monday, February 8, 2010

அனைத்து குழந்தைப் புலிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனராம்:

எதிர்வரும் மே மாத முடிவிற்குள் அனைத்து குழந்தைப் புலிகளும் விடுதலை செய்யப்படுவர் என குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜகாத் வெள்ளவத்தை தெரிவித்துள்ளார். ஒருவருட புனருத்தாபனத்தின் பின்னர் இவர்கள் தமது பெற்றோர் அல்லது உறவினர்களுடன் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டள்ளதாக லண்டன் பீபீசி யின் சிங்கள சேவைக்கு தெரித்த அவர் அரசாங்கம் இதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்தள்ளதாககவும் கூறியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களில் 40 சதவீதத்தினர் 18 வயதுக்கும் குறைவான இளைஞர் யுவதிகள் என ஐ.நா சபையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றது. அண்மையில் ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைப் புலிகள் தொடர்பான தமது கவலையை தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment