Friday, February 12, 2010

தேர்தல் மோசடி தொடர்பாக மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்று அனுமதி.

ஜெனரல் சரத் பொன்சேகா சார்பாக அவரது பாரியார் அடிப்படை மனித உரிமை வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் தனது கணவர் இடம்பெற்று முடிந்த தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் , அதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தயாராகவிருந்தபோது அதனை தடுக்கும் நோக்குடன் அரசாங்கம் அவரை தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தினை கருத்தில் எடுத்த நீதிபதிகள் ஜெனரல் பொன்சேகா உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யும் பொருட்டு தேவையான ஆவனங்கள் யாவற்றுடனும் அவரது சட்டத்தரணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம் சென்று கையொப்பம் பெற்றுக்கொள்ளவும் கலந்துரையாடவும் தடுத்து வைத்துள்ளவர்கள் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதுவே ஜனநாயகத்திற்கு கிடைத்த முதலாவது வெற்றி என தெரிவித்துள்ளார்:

No comments:

Post a Comment