Wednesday, February 17, 2010

கருணாநிதி ஓய்வுக்கு காலம் கனியவில்லை

தமிழக முதல்வர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஒத்தி வைத்து விட்டதைப் போல் தெரிகிறது. “புதிய சட்டமன்றம், அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ்மொழி மாநாடு, ஆகியவை எஞ்சி இருக்கும் மூன்று பெரும் பணிகள். “அவற்றை முடித்து விட்டு இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு நான் மக்களோடு இன்னும் நெருக்கமாக ஐக்கியமாவேன்,” என்று சென்ற ஆண்டு இறுதியில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் சொன்னார்.

ஆனால் அதே வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி வேறு விதமாகக் குறிப்பிட்டார். “ஓய்வு பெறுவது சொந்த விஷயம். இப்போது நடைபெறும் இந்தப் பாராட்டு விழா என்னை மகிழ்ச்சிப்படுத்தி ஓய்வு பெறச் செய்வதற்காக அல்ல.

“நான் ஆற்றி வரும் பணிகளை மேலும் வேகப்படுத்தி மேலும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற பாராட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன,” என்று முதல்வர் பேசினார்.

கட்சியினர் எல்லாரும் தம் வேகத்துக்கு ஈடு கொடுத்து தம்முடன் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். திரு கருணாநிதி (86) பதவி விலகுவதற்கு எதிராக அவருடைய இரண்டு புதல்வர்களான மு.க. அழகிரியும் மு.க. திரு ஸ்டானும் குரல் கொடுத்து இருந்தனர்.
இப்போதைய அரசியல் நிலவரங்களை வைத்துப் பார்க்கையில் முதல்வர் திரு கருணாநிதி, தம்முனுடைய பதவி விலகல் யூகங்களுக்குத் தற்காலிகமாகத் தானே முற்றுப் புள்ளிவைத்து இருக்கிறார்.

1 comment:

  1. May God bless him to go to the Guinness book as the "Oldest politician in the world" Good luck
    minister president.

    ReplyDelete