Monday, February 8, 2010

சிங்கள , முஸ்லிம் மாணவர்களை யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்க ஏற்பாடு.

யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள , முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் வடகிழக்கில் காணப்பட்ட போர்ச்சூழல் காரணமாக அப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சிங்கள , முஸ்லிம் மாணவர்கள் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க, இவ்வருடம் யாழ் பல்கலைக் கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப சிங்கள முஸ்லிம் மாணவர்களும் அனுமதிக்கப்படுவர் என தெரிவத்துள்ளார்.

யாழ் பல்கலைக் கழகத்தில் 1900 மாணவர்களுக்கு இடவசதி உள்ளதாக தெரிவித்துள்ள அவர் அனுமதி எண்ணிக்கையில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என குறிப்பிட்டுள்ளார். வருடாந்தம் நாடாளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 21000 மாணவர்களை உள்ளவாரியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment