ஹில்லாரி கிளின்டன் மீது வழக்கு
அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் மீது டெக்சாஸ் மாகாண காவல் துறை அதிகாரி குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில், ஹில்லாரி போட்டியிட்டார்.
இதற்கான பிரச்சாரத்திற்காக அவர் சென்றபோது, அவரது வாகனத்துடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகர காவல் துறை அதிகாரி விக்டர் லொஸாடா என்பவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, உயிரிழந்தார்.
இந்நிலையில் தமது கணவருக்கு டல்லாஸ் நகர காவல் துறை,முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும், அவர் அணிந்திருந்த ஹெல்மட் தரம் குறைந்ததாக இருந்ததும் அவர் உயிரிழக்க காரணமாக அமைந்துவிட்டதாகவும் குற்றம் சாற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதில் எதிராளிகளாக ஹில்லாரி கிளின்டன்,டல்லாஸ் நகர காவல் துறை, ஹெல்மட் தயாரிப்பு கம்பெனி உள்ளிட்டோரை சேர்த்துள்ளார்.
தமது கணவர் கொல்லப்பட்டதற்கு தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.
1 comments :
Mrs.Clinton would've taken immedidiate steps to get a reasonable compensation to the particular police officer,who died
while he was serving in the security division of Mrs.Clinton.It's a great mistake done to the family of the
particular police officer's family.
Before you try to take out the dust from the other's eye you should know you have a big log in your eye.
Post a Comment