Monday, February 8, 2010

மனித உரிமைகள் அமைச்சர் ஜெனிவா பயணம். ஐ.நா விற்கு விளக்கமளிப்பாராம்.

முன்னாள் இராணுவத் தளபதியும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் பொன்சேகா வெளியிட்டுள்ள இரு கருத்துக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் காப்பகத்திற்கு விளக்கமளிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவா சென்றுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தின் போது புலிகளின் தலைவர்கள் சரணடையும் பொருட்டு வெள்ளை கொடிகளை உயர்த்தியவாறு சரணடைய முற்பாட்டதாகவும் , தேர்தலின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்த இரு கருத்துக்கள் தொடர்பாகவும் ஐ.நா விற்கு விளக்கமளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமைச்சருடன் சட்டத்தரணி மொஹான் பீரிசும் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com