Tuesday, February 16, 2010

தேர்தல் முடிவுகளை நிராகரிக்கக்கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்.

இடம்பெற்று முடிந்துள்ள தேர்தலில் பல்வேறுபட்ட மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, அதன் முடிவுகளை ரத்துச் செய்யவேண்டும் எனக்கோரி எதிர்கட்சிகள் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா சார்பாக உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் தேர்தல் காலங்களில் அரச ஊடகங்கள் , அரச சொத்துக்கள் , அரச அதிகாரிகள் ஜனாதிபதி ராஜபக்சவிற்கு சார்பாக செயற்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையாளர் உட்பட 20 அதிகாரிகள் இணைந்து பதிவான வாக்குகளை ராஜபக்சவிற்கு ஆதரவாக மாற்றியாதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது பா.உ ரவி கருணாநாயக்க, பா.உ ஜோன் அமரதுங்க, ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, பா.உ அனுரகுமார பிரியதர்சன, பா.உ கந்துநெந்தி ஆகியோரும் சட்டதரணிகளுடன் பிரசன்னமாகியிருந்தனர்.

No comments:

Post a Comment