Tuesday, February 16, 2010

இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஈயு அறிவிப்பு.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவல் பிரஸல்ஸில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்மானம் குறித்து இலங்கை அரசு, இன்று தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான சாசனத்தின் மூன்று பிரிவுகளை நடைமுறைப்படுத்துவதில் குறைபாடுகள் காணப்பட்டதாகத் தெரிவித்தே இந்த சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் ஆறுமாத காலப் பகுதியில், மேற்கூறிய குறைபாடு தொடர்பாக இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment