Wednesday, February 3, 2010

இராணுவச் செய்திகளை வெளியிடுவதற்குத் தடை

இராணுவத்தில் உள்ள தளபதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் எவரும் அனுமதியின்றி நேர்காணல்கள், செய்திகளை பெற்றுக்கொள்ளுதல், முப்படையினர் மற்றும் காவற்துறையில் இடம்பெயரும் பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அரச பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் பணிப்பாளர் லக்ஷ;மன் ஹூலுகல்லவின் கையெழுத்தில் ஊடகங்களுக்கு அனுப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதடிப்படையில் இராணுவம் மற்றும் காவற்துறையினர் தொடர்பாக செய்திகள் மற்றும் தகவல்களை வெளியிடும் உரிமை அவற்றின் ஊடகப் பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு படைகளை சேர்ந்த அதிகாரிகளை ஊடகங்கள் தொடர்பு கொள்ள வேண்டுமாயின் அது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலமான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். அனுமதிக் கோரும் முன்னர் அது குறித்து தனக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என லக்ஷ;மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படைகளில் பணியாற்றும் அதிகாரிகளிடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களையும் அவர்களின் செவ்விகளை சில ஊடகங்கள் பெற்று வருவதாகவும் எவ்வித பொறுப்புமற்ற வகையில் அவர்கள் வெளியிடும் தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதுடன் நாட்டின் பாதுகாப்புக்கும் நேரடியான அழுத்தங்கள் ஏற்படுவதாகவும் ஹூலுகல்ல குறிப்பிட்டுள்ளார். இதனால் நடைமுறையில் சட்டத்தை கடுமையாக அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment