Sunday, February 14, 2010

போர்க் குற்றம் : இலங்கை அரசு மறுப்பு

இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக கொழும்புக்கான ஐ.நா. முன்னாள் பேச்சாளர் கோடன் வைஸ் கூறியதை இலங்கை அரசு மறுத்துள்ளது. ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு கோடன் வைஸ் அளித்த பேட்டியில், இறுதிகட்டப் போரில் 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் கூறியிருந்தார்.

இதனை மறுத்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, இவ்வளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார்.

இதேபோல, இத்தகவலை மறுத்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகமா, இறுதிகட்டப் போரின் போது நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் வைசும் ஒருவர் என்பதால் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

1 comment:

  1. Why Mr.Gordan Weiss took such a long time to come out with his detection.As Mr .Bogallama said his
    reactions may be owing to his deportation from Srilanka.Good luck Gordon Weiss.

    ReplyDelete